நாட்டுக் கோழி வளர்ப்பு
நாட்டுக் கோழி வளர்ப்பு வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது. குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும். வளர்க்கும் முறைகள் நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும். பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இ...